அஸ்மின்: பெர்சத்துவுக்கு விட்டுக்கொடுப்பதில் தயக்கமேதுமில்லை

pkrஅடுத்த   பொதுத்    தேர்தலில்     தன்னுடைய   தொகுதிகள்   சிலவற்றை    பார்டி   பிரிபூமி  பெர்சத்துவுக்கு   விட்டுக்கொடுப்பதில்    பிகேஆருக்குப்   பிரச்னை  இல்லை  என  அதன்   துணைத்    தலைவர்   முகம்மட்    அஸ்மின்   அலி    கூறினார்.

பிகேஆர்  உருவானபோது    டிஏபியும்    பாஸும்   அதைத்தான்   செய்தன    என்றவர்  சொன்னார்.

“1999-இல்  பிகேஆர்   உருவானபோது    எங்களுக்கென   தொகுதிகள்   இல்லை.  டிஏபி-இடமிருந்தும்   பாஸிடமிருந்தும்   சில  தொகுதிகளைப்   பெற்றோம்.  அவற்றிடமிருந்து    தொகுதிகள்   கிடைக்கவில்லை    என்றால்   நாங்கள்   இன்று,  இங்கு   இருந்திருக்க   மாட்டோம்.

“இப்போது   எங்கள்  முறை”,  என   அஸ்மின்   ஷா   ஆலமில்    செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.

தொகுதிகள்    தொடர்பில்    கட்சிகளுக்கிடையில்   பேச்சு    நடத்தப்படும்   என்றும்    அதில்   யார்  எந்த  இடத்தில்   வெற்றிபெற   முடியும்   என்பதும்   கவனத்தில்  கொள்ளப்படும்  என்றும்   அஸ்மின்     கூறினார்.