ரஹ்மான் டஹ்லான்: எதிரணியில் அரசியல்தான் இருக்கிறது கொள்கைகள் இல்லை

abd rahmanஎதிர்க்கட்சிகள்  அரசியல்   பதவிகள்  பற்றியே   பேசிக்  கொண்டிருக்காமல்   அவற்றின்   கொள்கைகள்  என்னவென்பதையும்    எடுத்துரைக்க    வேண்டும்   என்கிறார்   பிரதமர்துறை   அமைச்சர்   அப்துல்   ரஹ்மான்   டஹ்லான்.

அப்போதுதான்   அவற்றிடம்   பொதுவான   கொள்கைகள்   உண்டா,   அவற்றின்  கொள்கைகள்  பிஎன்   கொள்கைகளை  விடவும்   சிறந்தவையா    என்பதை  மக்கள்  மதிப்பிட   முடியும்.

இப்போதெல்லாம்   எதிரணிகளிடமிருந்து   வரும்    அறிக்கைகள்   அடுத்த    பிரதமர்   யார்,       துணைப்    பிரதமர்  யார்   என்று  விவாதிப்பதற்கே    முக்கியத்துவம்   கொடுக்கின்றன  என்றாரவர்.

“ஆனால்,  மலேசியர்களுக்கு  இப்போது   தேவை   கொள்கை   அறிக்கைகள்.

“அவற்றின்  பொருளாதாரக்  கொள்கை    என்ன?   ஆராய்ச்சி  தொடர்பான  கொள்கை   என்ன?  கல்விக்   கொள்கை   என்ன?

“மகாதிரின்   அறிக்கைகளும்  முகைதினின்    அறிக்கைகளும்    அரசியல்   பதவிகள்   பற்றித்தான்   பேசுகின்றன.

“பிஎன்னிடம்   அனுபவம்  இருக்கிறது.  ஒவ்வொரு  நாளும்   நிர்வாகக்   கொள்கைகளை   அடிப்படையாகக்   கொண்ட     அறிக்கைகளை  வெளியிடுகிறோம்.  ஆனால்,  இன்றுவரை    பக்கத்தான்   ரக்யாட்,   பக்கத்தான்  ஹராபான்  அல்லது    இன்னும்   என்னென்னவோ  அவற்றின்   பொதுவான  கொள்கைகள்   என்னவென்பதை  நாம்     அறியோம்”,  என்று   ரஹ்மான்  டஹ்லான்  கூறினார்.