பிகேஆருடன் ஒன்றிணைவது தேவையற்றது என்கிறார் பார்டி அமனா நெகரா (அமனா) துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப்.
அப்படியொரு யோசனையைப் பரிசீலிக்க தயார் என பிகேஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி கூறியிருப்பதற்கு அவர் இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
அஸ்மினின் கருத்துக்கு “மில்லியன் தடவை நன்றி” என்றுரைத்த சலாஹுடின், இஸ்லாமிய போராட்டத்தை ஒரு முற்போக்கான முறையில் கொண்டு செல்ல உருவாக்கப்பட்டதுதான் அமனா என்றார்.
இப்போது பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) பக்கத்தான் ஹராபானுடன் தேர்தல் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டிருப்பதை அடுத்து பிஎன்னை அடுத்த பொதுத் தேர்தலில் தோற்கடிக்கும் விசயத்தில் அமனாவின் பொறுப்பு கூடியுள்ளது என்றவர் சொன்னார்.
“அதனால், அமனா தலைவர்கள், உறுப்பினர்கள் சார்பில், இணைப்பு என்பது தேவையில்லை என்று கூறிக்கொள்கிறேன்”, என்றார்.