இப்ராகிம் அலி: மக்கள் நஜிப்பை ‘நிராகரிக்கலாம்’ ஆனால் 14வது பொதுத் தேர்தலில் வெற்றி பிஎன்னுக்குத்தான்

aliபிஎன்    மக்களின்   நம்பிக்கையை   ஓரளவு   இழந்திருந்தாலும்     அடுத்த    பொதுத்  தேர்தலில்    அது  ஆட்சியைத்   தக்க   வைத்துக்கொள்ளும்    என்கிறார்   பெர்காசா   தலைவர்   இப்ராகிம்   அலி.

மக்களில்   90  விழுக்காட்டினர்   பிரதமர்    நஜிப்   அப்துல்  ரசாக்கை   நிராகரிக்கிறார்கள்   என்று    பல்வேறு    ஆய்வாளர்கள்   கூறுவதை  அவர்     சுட்டிக்காட்டினார்.

“எல்லாருமே   நஜிப்பை    ஒதுக்கித்   தள்ளுகிறார்கள்.  ஆனால்,  அவர்களே (ஆய்வாளர்கள்)  பிஎன்   தோற்காது    என்கிறார்கள்.  இது  வியப்பாக   இல்லையா?”,  என  இப்ராகிம்   மலேசியாகினிக்கும்   பிரி  மலேசியா  டூடே(எப்எம்டி)-க்கும்   வழங்கிய   நேர்காணலில்    வினவினார்.

“விலைவாசி   உயர்வு,  1எம்டிபி    அல்லது    வேறு  விவகாரங்களுக்காக    மக்கள்   பிஎன்னை   நிராகரிப்பது    உண்மைதான்.   ஆனால்,   அதே   வேளையில்,     அவர்கள்   மகிழ்ச்சியாக  இல்லை    என்றாலும்கூட      எதிரணிக்கு   வாக்களிக்க    மாட்டார்கள்.    ஏனென்றால்    அங்கும்  எதுவும்   ஒழுங்காக   இல்லை”,  என்றார்.

அதன்    “வாக்கு   வங்கிகளாக”த்    திகழும்   கிராமப்புற   வாக்காளர்களும்   பிஎன்னின்  வெற்றிக்கு   உறுதுணையாக   இருப்பார்கள்    என  இப்ராகிம்   அலி   குறிபிட்டார்.

“உதாரணத்துக்கு    ஃபெல்டா   தொகுதிகள்.     அவை   அரசாங்க     உதவியை    நம்பியுள்ள  மலாய்க்காரர்களைக்   கொண்ட    கிராமப்புற    தொகுதிகள்…. நஜிப்   கெட்டிக்காரர்     ரப்பர்   பால்   வெட்டுவோருக்கு,   மீனவர்களுக்கு    ரிம200,   ரிம300,  ரிம500   எனக்  கொடுக்கிறார்

“அதனால்தான்   சொல்கிறேன்.    அடுத்த    தேர்தலில்     மேலும்    ஐந்து    விழுக்காட்டு   வாக்குகள்   பிஎன்னுக்கு   ஆதரவாக     திரும்பும்”,  என்றவர்   சொன்னார்.