தப்பாக சொல்லியிருந்தால் என்மீது வழக்கு தொடுக்கலாம்: பிரதமருக்கு ரபிசி சவால்

rafiziபிகேஆர்   உதவித்   தலைவர்  ரபிசி  ரம்லி,   எம்ஆர்டி   திட்டச்  செலவு   குறித்து     தாம்    சொல்லியதில்   தவறிருந்தால்    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    தம்மீது   வழக்கு    தொடுக்கலாம்    எனச்  சவால்  விடுத்துள்ளார்.

“150கிலோ   மீட்டர்   எம்ஆர்டி  திட்டத்துக்கான   மொத்த   செலவு    ரிம100பில்லியனைத்    தாண்டாது     என்றால்    நஜிப்  ஏழு   நாள்களுக்குள்   என்மீது   வழக்கு    தொடுக்கலாம்.

“இன்றிலிருந்து   ஏழு   நாள்களுக்குள்      அவர்    வழக்கு   தொடுக்கவில்லை     என்றால்,    (எம்ஆர்டி  திட்டத்தில்)   ரிம2 பில்லியனை   மிச்சப்படுத்திவிட்டதாகக்  கூறிக்  குழப்பமான    அறிக்கை  விடுத்ததற்காக    அவர்    மக்களிடம்   மன்னிப்பு    கேட்க    வேண்டும்”,  என  ரபிசி   இன்று   கோலாலும்பூரில்   செய்தியாளர்   கூட்டமொன்றில்   கூறினார்.

நஜிப்   கடந்த   வியாழக்கிழமை,    சுங்கை   பூலோவுக்கும்   செமந்தானுக்குமிடையிலான     எம்ஆர்டி-இன்     தொடக்கக்  கட்டத்தைத்   தொடக்கி    வைத்தபோது,     அந்தத்     தொடக்கக்   கட்டத்துக்கு    ரிம23 பில்லியன்   செலவாகும்   என்று   திட்டமிடப்பட்டிருந்ததாகவும்    ஆனால்,   ரிம21 பில்லியன்  செலவில்    கட்டி  முடிக்கப்பட்டதால்   ரிம 2பில்லியன்   மிச்சமானது   என்றும்    அறிவித்திருந்தார்.

பிரதமரின்  இந்த    அறிவிப்பு    மொத்த   எம்ஆர்டி   திட்டத்துக்குமான   செலவு  ரிம100பில்லியனைத்   தாண்டும்     என்று   தாம்   ஏற்கனவே     தெரிவித்திருந்த   அச்சத்தை   உறுதிப்படுத்துக்கிறது    எனக்  கடந்த   சனிக்கிழமை   கூறியிருந்தார்.