அரசியல்வாதிகள் நாட்டைக் காக்க முற்பட வேண்டுமே தவிர தங்கள் அரசியல் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் கூறினார்.
“எல்லாருக்கும் பிரதமராக வேண்டும், துணைப் பிரதமராக வேண்டும் என்று ஆசைதான். ஆனால், நீங்கள் நாட்டைப் பற்றிக் கவலைப்படுவராக இருந்தால், உங்கள் பேரப் பிள்ளைகளுக்காக நாட்டைப் பாதுகாக்க விரும்பினால் பிரதமரை மாற்றுவது மட்டும் போதாது.
“அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டும். துணிச்சல்காரர்களும் கொள்கைப் பிடிப்பாளர்களுமே அப்படிப்பட்ட செயல்களைப் புரியத்தக்கவர்கள்”, என ஜைட் தம் வலைப்பதிவில் கூறினார்.
அடுத்த பொதுத் தேர்தலில் எதிரணி ஆட்சிக்கு வந்தால் யாருக்குப் பிரதமர் பதவி என்ற விவகாரம் அடிபடுவது தொடர்பில் ஜைட் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
அறிவுள்ளவர்களின் பேச்சு இப்படித்தான் இருக்கும்…சபாஷ் ஜைட் !