சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு ஆலை முழுமையாக செயல்படத் தொடங்கியதால் மண்டலம் 1-இல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 99 விழுக்காட்டுக்கு இன்று காலை நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது.
கோலாலும்பூர், கோம்பாக், கிள்ளான், கோலா லங்காட், கோலா சிலாங்கூர் ஆகியவற்றிலும் பெட்டாலிங்கில் 98 விழுக்காட்டுப் பகுதிகளிலும் நீர் விநியோகம் முழுமையாக நிலைநிறுத்தப்பட்டது என ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சென். பெர்ஹாட் (ஸபாஸ்) ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அம்மண்டலத்தில் சுங்கை பெஞ்சாலா, புக்கிட் லஞ்சான், பிங்கிரான் டிடிடிஐ, எஸ்எஸ்21 டமன்சாரா ஆகிய இடங்களுக்கு மட்டும் நீர் விநியோகம் இன்னமும் முழுமையாக நிலைநிறுத்தப்படவில்லை.
மண்டலம் 2-இல் உள்ள பகுதிகளில் இன்று மாலை மணி 4க்குப் பிறகு தண்ணீர் வரும் என ஸபாஸ் கூறியது.