நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குக் குழிபறிக்க முயன்றதாக டாக்டர் மகாதிர் முகம்மட் மீது விசாரணை நடத்தப்படுமானால் அது உலகம் மலேசியாவைப் பார்த்துக் “கைகொட்டிச் சிரிப்பதற்கு” இன்னொரு வாய்ப்பாக அமைந்து விடும் என்கிறார் லிம் கிட் சியாங்.
“22 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மகாதிர் முதுமை நிலையில், 91ஆவது வயதில், ‘நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக’க் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
“மலேசியாவில் இப்படிப்பட்ட கோமாளித்தனங்களுக்குக் காரணமானவர்களின் தலைகளை ஆராய வேண்டும்”, என லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
முன்னாள் பிரதமர் சட்டப்பிரிவு 124சி-இன்கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறியிருப்பதற்கு எதிர்வினையாக கேளாங் பாத்தா எம்பி அவ்வாறு கூறினார்.
“நாங்கள் மகாதிரைச் சட்டப்பிரிவு 124சி-இன்கீழ் விசாரணை செய்யவில்லை என்று யார் சொன்னது?
“அதற்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போமோ என்பது வேறு விசயம்”, என நூர் ஜஸ்லான் கூறியிருந்தார்.
There is a Tamil saying. A cow can even eat shit for a political post. This reminds me when I see Kit Siang supporting Mahathir.