மலேசியா பாக்ஸைட் சுரங்கத் தொழில் நடவடிக்கைகளுக்கு விதித்துள்ள தடையை டிசம்பர் 31 தொடங்கி மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இயற்கை வள, சுற்றுசூழல் அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் இதனைத் தெரிவித்தார்.
பாக்ஸைட் சுரங்கத் தொழிலுக்கு ஜனவரியில் முதன்முதலாக மூன்று மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அது மும்முறை நீட்டிக்கப்பட்டது.
சீனாவுக்குப் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததால் பாக்ஸட் சுரங்கத் தொழில் கடந்த ஈராண்டுகளில் மிகவும் ஆதாயகரமான தொழிலாக விளங்கி வந்தது. ஆனால், பாக்ஸைட் தோண்டி எடுக்கும் நடவடிக்கைகளின் பெருக்கத்தால் தண்ணீர் மாசுபடுவதாகவும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்களிடையே எதிர்ப்புக்குரல் எழுந்ததை அடுத்து அத்தொழிலுக்குத் தடை விதிக்கப்பட்டது.
-ராய்ட்டர்ஸ்