டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் பதில் தெரிந்த கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்பதை நிறுத்த வேண்டும் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார்.
லிம் இதுவரை 35 கேள்விகள் கேட்டிருக்கிறார், எல்லாமே பாவனைக் கேள்விகள் என சாலே ஓர் அறிக்கையில் கூறினார்.
அதாவது பதில் தெரிந்தும் தெரியாததுபோல் கேள்வி கேட்கிறார் லிம் என்றாரவர்.
“லிம் கேட்கும் ‘கேள்விகள்’ பலவற்றுக்கு அமைச்சர்கள் ஏற்கனவே பதில் அளித்து விட்டார்கள்.
“லிம்முக்கும் அது தெரியும். ஆனால், தெரியாததுபோல் பாசாங்கு செய்கிறார்”, என சாலே கூறினார்.
லிம் கேள்விகள் கேட்பதில் நேரத்தை வீணடிக்கிறார். அவர் கேள்விகள் கேட்பதே பக்கத்தான் ஹராபானின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது போன்ற முக்கிய விவகாரங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பத்தான் என்றவர் சொன்னார்.
“இந்த விவகாரத்தில் லிம், முகைதின் யாசின், டாக்டர் மகாதிர் முகம்மட், பிகேஆர், பாஸ் ஆகியோருக்கிடையில் ஒற்றுமை இல்லை”.
அவர்களிடையே ஒற்றுமை இல்லை என்பதை நாம் கவனித்து விடக் கூடாது என்பதற்காகத்தான் லிம் அதை இதைச் சொல்லிக் கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறார் என சாலே கூறினார்.
நாகாக்க…?
தலையிருப்ப வாலாடுதல் நன்றன்று…
தடியெடுத்தோன் எல்லாம் தண்டல் என்பது கொடிது
ellaam naadagamedai, ithil engum nadigar(arasiyalvaathigal) koottam.
டேய் வெங்காயம் யாருடா பாசாங்கு நாடகம் ஆடுவது? உன்மாதிரி அம்னோ நாதாரிகள் தான் உன்னுடைய பொய் பித்தலாட்டங்களை நம்புவார்கள்.