1எம்டிபி, ஹூடுட் பற்றிய உண்மை என்ன?, சாபா தேவாலயங்கள் மன்றம் பிரார்த்திகிறது

 

Sabahchurchpraysமலேசியாவில் உண்மை மேலோங்க வேண்டும், குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களிடத்தில், என்று சாபா தேவாலயங்கள் மன்றம் பிரார்த்தனை செய்கிறது.

1எம்டிபி மற்றும் ஹூடுட் மசோதா போன்ற பிரச்சனைகள் பற்றிய உண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்று மன்றத்தின் தலைவர் ரெவெரண்ட் ஜெரி டுசிங் கூறினார்.

1எம்டிபி பற்றிய உண்மை என்ன? மலேசியர்களிடமிருந்து எல்லாம் மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த மர்மங்களின் உண்மையைத் தெரிந்துகொள்ள நாம் வெளிநாட்டவர்களின் நடவடிக்கைகளுக்காக காத்துக்கிடக்க வேண்டியுள்ளது என்று டுசிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.

கிழக்கு மலேசியர்களுக்கு மிரட்டல்

இதனிடையே, ஹூடுட் மசோதா பற்றிய உண்மை என்ன என்றும் டுசிங் வினவினார். புத்ராஜெயா கிழக்கு மலேசியர்களை மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் வஞ்சகம் போன்றவற்றின் மூலமாக இஸ்லாமியர்களாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

மலேசியா ஒப்பந்தம் 1963 இல் உறுதியளிக்கப்பட்டிருக்கும் சமய சுதந்திரத்தைப் பறிக்க மேற்கொள்ளப்படும் எந்த வஞ்சக முயற்சிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டில் சாபா மக்கள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள் என்று டுசிங் மேலும் கூறினார்.