டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மசீச தலைவர் லியோ தியோங் லாய்க்கு மலேசியாவிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்களின் தலைவர்கள் கூட 1எம்டிபி மற்றும் இதர தற்போதைய பிரச்சனைகள் பற்றி பேசுகின்றனர் என்பதை நினைவூட்டினார்.
இந்நாட்டிலுள்ள தேவாலயத் தலைவர்கள் மட்டுமல்ல, இங்கிலாந்திலுள்ள தேவாலயங்கள், வத்திக்கான் ஆகியவற்றிலிருந்து உலகிலுள்ள நிச்சயமற்ற நிலை மற்றும் அச்சம் குறித்து கவலை தெரிவித்துள்ளன என்பதை லிம் சுட்டிக்காட்டினார்..
மசீச தலைவர் லியோ கிணற்றுத் தவளையாக இருப்பதை நிறுத்த வேண்டும். பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகில் என்ன நடக்கிறது என்பதை அவர் கவனிக்க வேண்டும் என்று கிட் சியாங் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுதான் உலகத்துக்கே தெரிந்த ரகசிய மாயிற்றே. தெரியாதது எது ?