பார்ட்டி பெரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) நிறுவன உறுப்பினரான அனினா சாஅடுடின் அவருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் கட்சியின் ஶ்ரீகண்டி தலைமைப் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருப்பதாக கூறப்படுவதற்கும் விரைவில் எதிர்வினையா/ற்றுவார் என்று சினார் ஹரியான் கூறுகிறது.
இந்த விவகாரத்தில் எழுந்துள்ள அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க அனைவரும் அனினாவுக்கு சற்று கால அவகாசம் அளிப்பார்கள் அவர் நம்புகிறார் என்று அனினாவின் உதவியாளர் அலிஸா முகமட் கூறியதாக அந்த மலாய் நாளிதழ் செய்தி கூறுகிறது.
முன்னாள் அம்னோ வனிதா உறுப்பினரான அனினா ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனைத்தையும் விளக்குவார் என்று அலிஸா மேலும் கூறினார்.