உலாமாக்கள் மீது அவதூறு கூறுவது சமயத்தின் மீது அவதூறு கூறுவது போன்றதாகும் என்று உலாமாக்கள் கூறுகின்றனர்

 

Mufti1எம்டிபி-ஹாஜ் ஏற்பாதரவு திட்டத்தை தாங்கள் தற்காத்து பேசுவதால் தாங்கள் அரசாங்கத்தை மகிழ்சிப்படுத்த முயற்சிக்கிறோம் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறியிருப்பது பற்றி உலாமாக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மகாதிர் தாம் கூறியதிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டார்.

சமய அறிஞர்களைத் தாக்குவது மகாதிரின் மதிப்புக்கு ஒவ்வாததாகும் என்று பகாங் முப்தி அப்துல் ரஹ்மான் ஓஸ்மான் கூறினார்.

“என்னைப் பற்றி யாராகிலும், மகாதிர் உட்பட, தனிப்பட்ட முறையில் தாக்கினால் நான் கவலைப்பட போவதில்லை, ஆனால் சமயத்தைத் தொடக்கூடாது, ஏனென்றால் உலாமா மீது அவதூறு கூறுவது சமயத்தின் மீது அவதூறு கூறுவதாகும்”, என்று அப்துல் ரஹ்மான் உத்துசான் மலேசியாவிடம் கூறினார்.

மகாதிரின் குற்றச்சாட்டுகள் பற்றி தாம் தெரிவித்த கருத்துகள் உண்மையின் அடிப்படையில் கூறப்பட்டவை, அரசியல் நோக்கத்தோடு தூண்டப்பட்டவையல்ல என்றும் அப்துல் ரஹ்மான் மேலும் கூறினார்.

மகாதிர் தெரிவித்திருந்த கருத்துகள் குறித்து பேராக் முப்தி ஹருசானி ஸாக்காரியா மற்றும் கிளந்தான் முப்தி முகம்மட் ஸூக்ரி முகமட் ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர். ஆனால், அதற்கு மேல் எதுவும் கூற மறுத்து விட்டனர்.

1எம்டிபியால் ஏற்பாதரவு செய்யப்படும் ஹாஜ் யாத்திரைகள் நல்லதல்ல மற்றும் ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப்படாது ஏனென்றால் அந்நிதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் திருடப்பட்டது என்று மகாதிர் கூறியிருக்கிறார்.

பின்னர், இக்கருத்து குறித்து தம்மைச் சாடியவர்களை முகத்துதி செய்பவர்கள் என்று மகாதிர் வர்ணித்தார். அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட முப்திகள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டியிருக்கிறது என்றாரவர்.

ஒருவர் தமக்குக் கிடைத்தது ஹராம் பொருள் என்று தெரியாமலிருந்தால் அவர் அதை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார் என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.

திருடிய பணம் ஹராம் பணம்தான். அதை சமய நோக்கத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் ஹலால் ஆக்க முடியாது என்றார் மகாதிர்.