பினாங்கு இந்து அறவாரிய (பிஎச்இபி) தலைவர் பி.இராமசாமி, “தைப்பூசத்தில் குழப்பம் விளைவிக்கப் புறப்பட்டிருக்கும் ஸ்ப்ரே கும்பல்” குறித்து அடுத்த வாரம் போலீசைச் சந்தித்து பேசப் போவதாகக் கூறினார்.
தைப்பூசத்துக்குப் பெண்கள் ஆடை அணிந்து வரும் முறை என்றும் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை என்றாரவர்.
“இப்போது, திடீரென்று தங்களைச் சமூகக் காவலர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு கும்பல் பெண்கள்மீது சாயத்தை ஸ்ப்ரே செய்ய விரும்புவது ஏன்?”, என்று பினாங்கின் இரண்டாவது துணை முதல்வரான இராமசாமி வினவினார்.
அக்கும்பலை முரடர்கள், கோழைகள், தீவிரவாதிகள் என்று வருணித்த இராமசாமி, அவர்களின் செயல் சட்டவிரோதமானது என்று எச்சரித்தார்.
அக்கும்பல் ஹென்ரி பார்னபாஸ் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவரால் முகநூலில் தொடங்கப்பட்டது. இன்றுவரை 620 உறுப்பினர்களை அது பெற்றுள்ளது.
பிப்ரவரி 9-இல் கொண்டாடப்படும் தைப்பூச விழாவுக்கு வரும் பெண்கள் ஆபாச ஆடைகளில் காட்சியளிக்கக் கூடாதென்று அது எச்சரித்துள்ளது.
முதலில் அந்த மடையர்கள் வேஷ்ட்டி ஜிப்பா போன்ற ஆடையில் வரட்டும். காவடியில் முன் பேயாட்டம், மது அருந்தி வரும் இளைஞர் மந்திகள் ஆடுவதை நிறுத்த தைரியம் இருக்குமென்றால் பிறகு பெண் பின்னாள் spray பண்ணட்டும்.
தைப்பூச திருவிழாவிற்கு “ஆபாசமாக” வரும் பெண்கள் மீது சாயம் பூசுவது தவறே இல்லை. நானே முகம் சுளிக்கும் அளவுக்கு புடவையில் மிக மோசமாக தாராளம் காட்டிய என் தோழியை எவனோ ஒருவன் சிகரட்டால் சுட்டுவிட்டான். அதோடு திருந்தியவள் தான். இப்போது பண்போடு புடவை அணிகிறாள். அதே வேளை குடித்துவிட்டு சினிமா பாட்டுக்கு கும்மாளம் போடும் மந்திகளை என்ன செய்யப் போகிறார்களாம் இந்த பண்பாடு காப்பவர்கள்… கண்ட இடத்திலேயே செருப்பால் அடிக்கலாமா… சொல்லுங்கள்…
பாவம் பெண்கள். ஆண்களின் ஆதிக்கக் காலம் என்பதால் ஆண்கள் எது செய்தாலும் சரிதான்! பெண்களால் ஆளப்படும் ஆண்கள் பாவம்!
ஐயா anonymous நீங்கள் சாமி கும்பிட போறீர்களா அல்லது யார் எப்படி உடுத்தி இருக்கின்றனர் என்பதை கணிக்க போகிறீர்களா? கும்ப மேளாவில் அம்மண சாமியார்களுக்கு என்ன சொல்ல போகின்றீர்கள்?
கேடு கெட்ட இதுபோன்ற கயவர்களை நம் சமூகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும்.