சரவாக்குக்குப் புதிய சிஎம்

cmசரவாக்   மாநிலச்   சட்டப்படி      இடைக்கால   முதல்வர்    பதவி   கிடையாது  என்பதால்   அங்கு   ஒருவர்  புதிய   முதலமைச்சராக   இன்று   பதவியில்   அமர்த்தப்படுவார்   என்று     எதிர்பார்க்கப்படுவதாக    த    போர்னியோ   போஸ்ட்   கூறுகிறது.

இது   அவசரமாக    செய்யப்பட   வேண்டிய  ஒன்று     என்று   தகவலறிந்த    வட்ட்டாரமொன்றை   மேற்கோள்காட்டிக்  கூறிய   அந்நாளேடு,   அடினான்   சதேமின்    இறப்பை   அடுத்து    மாநில   அமைச்சரவையும்   கலைந்து   போனதாகத்தான்    அர்த்தம்    என்று  குறிப்பிட்டது.

“அந்த  வகையில்  ஒரு  பராமரிப்பு    அரசுதான்  இப்போது   மாநிலத்தை   ஆட்சி   செய்கிறது”,  என  அந்த   ஆங்கில மொழி  நாளேடு   கூறிற்று.

மாநில     ஆளுனருக்கே   முதல்வரை   நியமிக்கும்   அதிகாரம்   உண்டு  என    அந்த   வட்டாரம்   தெரிவித்தது.

எனவே,  அப்துல்  தயிப்   மஹ்முட்தான்   சரவாக்கின்   அடுத்த   முதல்வரை   நியமனம்   செய்வார்.

வழக்கமாக,  சரவாக்  பிஎன்னின்   மிகப்  பெரிய   கட்சியான  பெசாகா   பூமிபுத்ரா  பெர்சத்து(பிபிபி)   கட்சியைச்   சேர்ந்தவர்கள்தான்    முதலமைச்சர்களாக   இருந்து   வந்துள்ளனர்   என்பது   குறிப்பிடத்தக்கது.

அந்த  அடிப்படையில்     அமார்   ஆபாங்   ஜோகாரி    ஓபெங் ,  அமார்    டக்லஸ்    உக்கா  எம்பாஸ்,  அமார்   ஆவாங்   தெங்கா   ஹசான்   ஆகிய  மூவரில்    ஒருவருக்கு   முதலமைச்சராகும்    வாய்ப்பு   உள்ளதாகக்   கருதப்படுகிறது.