பினாங்கு உயர் நீதிமன்றம், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் குறித்த செய்தி ஒன்றை “திரித்தும் தவறாகவும்” வெளியிட்டதற்காக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பெர்ஹாட் (என்எஸ்டிபி) அவருக்கு ரிம300,000 கொடுக்கும்படி இன்று உத்தரவிட்டது.
செலவுத் தொகையாக ரிம35,000 சேர்த்துக் கொடுக்கும்படியும் உயர் நீதிமன்ற நீதிபதி ரோசில்லா யோப் உத்தரவிட்டார்.
ரோசில்லா தம் தீர்ப்பில், பெரித்தா ஹரியான் செய்தியாளர் சித்தி சோபியா முகம்மட் நசிர் எழுதிய செய்தி “திரித்துக் கூறப்பட்டது, தவறானது, களங்கத்தை உண்டுபண்ணுவது” என்று குறிப்பிட்டார்.
335000 வெறும் சில்லறை காசு. அம்னோவுக்கு இல்லாத பணமா? 1957 ல் வேண்டுமானால் அது பெரும்பணம் இப்போது அடிமட்ட அம்னோ நாதாரிக்கு கூட அது பெரிது கிடையாது