முன்னாள் பிரதமர் மகாதிர் அவர் ஆட்சியிலிருந்த போது நடந்த பிஎம்எப் (BMF)அவதூறு மற்றும் தற்போதைய 1எம்டிபி (1MDB) குழப்பமான சிக்கல்கள் ஆகியவற்றுக்கிடையிலான வித்தியாசங்களை விவரித்தார்.
பிஎம்எப் விவகாரத்தில் அதிகாரத்திலிருந்த அரசாங்கம் நேரடியாக எந்தத் தவறான செயல்களிலும் சம்பந்தப்பட்டிருந்தாக குற்றச்சாட்டுகள் இல்லை என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
“இதற்கு மாறாக, 1எம்டிபி விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் நேரடியாக தவறான செயல்களில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது.
“பிஎம்எப் விவகாரத்தில் அப்போதைய பிரதமர் என்ற முறையில் நான் நேரடியாக தொடர்புபடுந்தப்படவில்லை. அதேசமயம், 1எம்டிபி விவகாரம் தற்போதைய பிரதமர் நஜிப் (அப்துல்) ரசாக்குடன் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே அவர்தான் இந்த அவதூறின் மையமாக இருக்கிறார்”, என்று மகாதிர் கூறுகிறார்.
இந்த இரண்டு விவகாரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக எடுத்துக்காட்டியது தாம் பிரதமராக இருந்த போது 1எம்டிபி-போன்ற அவதூறு எதுவும் நடக்கவில்லை என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் என்றாரவர்.
பிஎம்எப் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டது சிஐஎ; அது பிஎம்எப் விவகாரத்தில் அமெரிக்க அரசு கண்டுபிடித்தவை பற்றிய வரையருக்கப்பட்ட அறிக்கை அல்ல.
இதற்கு மாறாக, 1எம்டிபி விவகாரத்தில் அமெரிக்க நீதித்துறை கலிபோர்னியோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கையை வெளியிட்டது. அதன் கண்டுபிடிப்பில் மலேசிய அதிகாரி 1 (MO1)1எம்டிபியின் விவகாரத்தோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.
பிரதமர்துறையின் அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் MO1 நஜிப் என்று உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், நஜிப்பின் பெயர் குறிப்பிடப்படாததால் அவர் விசாரிக்கப்படவில்லை என்று டாலான் வாதித்தார்.
சிறப்பு விசாரணைக் குழு
பிஎம்எப் விவகாரத்தை விசாரிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது என்றும் அதன் அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டது என்று கூறிய மகாதிர், 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் அரசாங்கம் இன்னும் ஒரு முறையான, சுயேட்சையான விசாரணைக் குழுவை அமைக்கவில்லை. அதோடு இப்போதிருக்கும் தேசியக் கணக்காய்வாளரின் 1எம்டிபி மீதான அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. அது அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பிஎம்எப் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகப் பல நடவடிக்கைகள் ஹோங் கோங் மற்றும் மலேசியாவில் எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
ஆனால், 1எம்டிபி விவகாரத்தில் போலீஸ் போன்ற அமைப்புகள் அவற்றின் விசாரணையை இன்னும் முடிக்கவில்லை. அதேசமயத்தில், அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சம்பந்தப்பட்டிருப்பதாக கருதப்படும் நபர்களை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டும் அளவிற்கு அவர்களின் விசாரணை சென்றுள்ளது என்பதை மகாதிர் குறிப்பிட்டார்.
ஆனால், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் விசாரணை ஆவணங்களை புதிய சட்டத்துறை தலைவர் நிராகரித்து விட்டார். மருத்துவக் காரணங்களுக்காக முந்திய சட்டத்துறை தலைவர் நீக்கப்பட்டு அவருடைய இடத்தில் நியமிக்கப்பட்டவர்தான் இந்தப் புதிய சட்டத்துறை தலைவர். முந்திய சட்டத்துறை தலைவர் மருத்துவக் காரணங்களுக்காக மருத்துவ வாரியத்தின் அறிக்கை ஏதும் இன்றி பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று மகாதிர் மேலும் விளக்கினார்.
பிஎம்எப் விவகாரத்தின் விளைவு பொதுவாக சமுதாயத்தின், எதிர்க்கட்சிகள் மற்றும் இதர அரசியல் குழுக்கள் உட்பட, வரவேற்பைப் பெற்றிருந்தது என்று மகாதிர் கூறிக்கொண்டார்.
தமது விவாதத்திற்கு வலுசேர்ப்பதற்கு மகாதிர் அமெரிக்க நாளேடுகளையும் சிஐஎ அறிக்கைகளையும் பத்திவாரியாக சுட்டிக் காட்டினார்.
அப்போ நீ உத்தமனா? இங்க பாருயா உத்தம மொகர கட்டைய!
கருத்து தெரியாதவன் எல்லாம் புரியாமல் கருத்து சொல்லக்கூடாது .