பெர்சே வழக்கு தொடுத்ததை அடுத்து விசாரணைக்கு இணங்கியது இசி

bersihபெர்சே  சார்பில்  தேர்தல்   ஆணைய(இசி)த்துக்கு   எதிராக   வழக்கு   தொடுத்திருந்த  ஸோ   ரந்தவா,   வழக்கை   மீட்டுக்  கொண்டிருக்கிறார்.  இசி,  செகாம்புட்டில்   தேர்தல்    தொகுதி  எல்லைத்  திருத்தத்துக்குத்    தெரிவிக்கப்பட்ட     ஆட்சேபனைகள்   குறித்து    விசாரணை   நடத்த   ஒப்புக்கொண்டதை   அடுத்து   அவர்   அவ்வாறு    செய்தார்.

தொடக்கத்தில்,   100  பேர்   ஆட்சேபனை    செய்திருந்தும்கூட    இசி   விசாரணை   போவதில்லை    என  ரந்தவாவிடம்    கூறியதாக    பெர்சே  தெரிவித்தது.

ஆனால்,  வியாழக்கிழமை   வழக்குரைஞர்   அலுவலகத்திலிருந்து  அறிவிக்கை(நோட்டீஸ்)    அனுப்பியதும்    ஒப்புக்கொண்டது.

“இதிலிருந்து   ஒன்று   தெளிவாக   தெரிகிறது.  விசாரணைக்கு     மறுப்பு    தெரிவிப்பதன்வழி   இசி   அதிகாரத்தை   மீறி   நடந்து   கொள்கிறது    அல்லது   பொறுப்புகளை    உணராதிருக்கிறது”,  என  பெர்சே  ஓர்   அறிக்கையில்   கூறியது.

“போதுமான    ஆட்சேபனைகள்   தெரிவிக்கப்பட்டால்,  ஆட்சேபனைகள்    சந்தேகத்துக்குரியவையாக    இருந்தாலும்,    பொது   விசாரணை    நடத்துவது   இசி-யின்  பொறுப்பாகும்.

“இசி-இன்   கடமையை      உணர்த்த   அதை   நீதிமன்றம்   கொண்டு   செல்ல   வேண்டியிருந்ததை  நினைக்க   வருத்தமாக   இருக்கிறது”,  என   அது   குறிப்பிட்டது