மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் சுல்கிப்ளி அஹமட் அரசியல்வாதிகளை எச்சரித்தபோது “மலேசியாவின் முதன்மை அதிகாரி”க்கும் சேர்த்தே அந்த எச்சரிக்கையை விடுத்திருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த எச்சரிக்கை அர்த்தமற்றது என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
“சுல்கிப்ளி ‘இருங்கள் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று எச்சரித்தபோது எம்ஓ1-க்கும் சேர்த்துதான் எச்சரிக்கை விடுத்தாரா, இல்லை என்றால் சீனாவில் புலிகளும் இந்தோனேசியாவில் முதலைகளும் கைது செய்யப்பட்டு நீதிமுன் நிறுத்திச் சிறையிடப்படுவதுபோல் அல்லாமல் இங்கு நெத்திலி பொடிகளை மட்டும் பிடித்து சுறா மீன்கள் சுதந்திரமாக சுற்றித் திரிய விட்டுவிடும் பழக்கத்தை எம்ஏசிசி மாற்றிக்கொள்ளும் என்று எப்படி நம்புவது?”, என்று லிம் ஓர் அறிக்கையில் வினவினார்.
நேற்று, சுல்கிப்ளி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், ஊழல் அரசியல்வாதிகள் எந்த நேரத்திலும் பிடிபட்டு நீதிமுன் நிறுத்தப்படலாம் என்று கூறியிருந்தார்.