பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், டிஏபியுடன் ஒத்துழைக்கும் சாத்தியம் அறவே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.
டிஏபி இஸ்லாத்துக்காக பாஸ் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை என்பதால் அதனுடன் ஒத்துழைப்பதற்கில்லை என்று மாராங் எம்பி தெரிவித்ததாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது.
“உலகளாவிய திருட்டுத்தனத்திலிருந்து மலேசியாவைக் காப்பதற்காக” பாஸுடன் ஒத்துழைக்கத் தயார் என்று டிஏபி மூத்த தலைவர் கூறியிருப்பதற்கு ஹாடி இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
டிஏபி “இன்னமும் இஸ்லாத்துக்கு எதிரியாகத்தான் உள்ளது” என்று கூறிய அவர், இஸ்லாமிய அரசை அமைப்பதுதான் பாஸ் போராட்டத்தின் மையக் கரு அதை டிஏபி எதிர்க்கிறது என்றார்.
அந்த வகையில் டிஏபியுடன் ஒத்துழைக்க முடியாது ஆனால், பார்டி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வுடன் ஒத்துழைப்பது குறித்து பேச்சு நடத்தத் தயார் என்று அவர் சொன்னார்.
டே சும்மா ஊளை விடதே