வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரரைக் கொன்றதாக ஐயுறப்படும் வியட்நாமிய பெண் பாடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராம். அவர் விருந்து நிகழ்வுகளில் கலந்து கொள்வதைக் காண்பிக்கும் படங்கள் அவரது முக நூல் பக்கங்களில் வெளியாகியுள்ளன.
மலேசிய விமான நிலையத்தில் கிம்-ஜொங் கொல்லப்படுவதற்கு நான்கு நாள் முன்னதாக அவர் ‘LOL’ என்று எழுதப்பட்ட சட்டை அணிந்திருப்பதைக் காட்டும் படமொன்று முகநூலில் பதிவிடப்பட்டிருந்தது. மலேசிய சிசிடிவி படங்களிலும் அவர் அதே போன்று சட்டையைத்தான் அணிந்திருந்தார்.
அப்பெண் கேளிக்கை மையமொன்றில் பணியாற்றி வந்தவர் என அவரைக் கைது செய்துள்ள மலேசிய போலீசார் கூறினர்.
இதனிடையே, வட வியட்நாமில் நெல் விளைச்சலில் ஈடுபட்டுள்ள ஒரு பண்ணையைச் சேர்ந்தவர்கள் மலேசிய போலீசார் குறிப்பிடும் அங்க அடையாளங்கள் தங்கள் மகளைப் போன்றிருப்பதாகக் கூறினார்கள். ஆனால், தங்கள் மகள் வீட்டை விட்டு வெளியேறி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது இதுவரை அவரைப் பற்றி எவ்வித தகவலும் இல்லை என்றார்கள்.