செகின்சானில் ஆவி வாக்காளர்கள்?

sekinஆகக்  கடைசியாக   வந்துள்ள   வாக்காளர்   பட்டியல் செகின்சான்   சட்டமன்றத்   தொகுதியில்  உள்ள      ஒரு  கிராமத்தில்   ஒன்பது  வீடுகளில்   358  வாக்காளர்கள்   தங்கி  இருப்பதைக்   காட்டுகிறது.

இதைக்  கண்டு   அதிர்ந்துபோன   டிஏபி   செகின்சான்   சட்டமன்ற   உறுப்பினர்   இங்   சுயி  லிம்   உடனடியாக   அந்த  இடத்துக்கு   ஓடோடிச்   சென்றார்.

“ரிஸாப்  சர்பினி   ஒரு  பாரம்பரிய   மலாய்   கம்போங்.  இப்போது   அதன்   வாக்காளர்   எண்ணிக்கை   358.  அவர்களில்  232 பேர்   கிள்ளான்,   கோலாலும்பூர்,  சாபா,  சரவாக்  ஆகிய  இடங்களிலிருந்து   வந்துள்ள  பல்லினங்களைச்    சேர்ந்தவர்கள்”,  என   அவர்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

செகின்சானில்   வசிக்காத   இவர்கள்   அப்பகுதிக்குள்   கொண்டுவரப்பட்டுள்ள    “ஆவி  வாக்காளர்களாக”  இருக்குமோ   என்றவர்   கவலை   கொண்டுள்ளார்.