நேற்று, புக்கிட் செந்தோசா, உலுசிலாங்கூர், லாக்கப்பில் ஒருவர் இறந்து விட்டார். கிள்ளான் போலீஸ் லாக்கப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த இது போன்ற சம்பவத்திற்கு பிறகு இது நடந்துள்ளது.
எம். தனசீலன், 43, லாக்கப்பில் சுயநினைவில்லாமல் கிடப்பதை நள்ளிரவு 1.50க்கு ஒரு காவலாளி கண்டதாக த ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
ஓர் அம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. தனசீலன் அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது என்று உலுசிலாங்கூர் போலீஸ் தலைவர் ஆர். சுப்ரமணியம் கூறினார்.
இது திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சவப் பரிசோதணை நாளை நடத்தப்படும் என்றும் அந்நாளிதழ் கூறுகிறது.
வீடு புகுந்து திருடியதாக சந்தேகிக்கப்படும் தனசீலனுக்கு கொடுக்கப்பட்ட 4 நாள் ரிமாண்ட் உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வந்திருக்கும் என்று சுப்ரமணியம் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை தனசீலன் வயிற்று வலி காரணமாக கோலகுபு பாரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிட்சை அளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
லாக்கப் மரணம் : அது ஒரு தொடர்கதை அல்ல !!!
தொடரும் துயரம் !!! முற்றுப் பெறுவது எப்போது ????????
:
இது தொடரும்– அமெரிக்காவில் கருப்பு உயிர் போன்று இங்கு நம் உயிர். – உயிருக்கு எந்த விலையும் கிடையாது.
எமன் லோகாப்பில் கூட அரசியல் ஆட்டம் ஆடுது
ஆனால் இது மலேசியாவிலுள்ள மட்டும்முள்ள சோம்பேறி எமன் போல …அடைத்து வைத்தவர்களை நீதிக்கு முன் அடித்துவிடுகிறது. திருட்டுக்கு இப்படி ஒரு தண்டனையா …கோடி கோடியா திருடுபவனிடம் எமனும் லஞ்சம் போடுதோ ? எமனை உள்ளேஹ் தள்ளுவோம் !
நம் இனத்தை ஒழிக்கும் திட்டம்
இங்கே பகிர ஒரு சம்பவம், அவன் தந்தையை இளவயதிலேயெ இழந்த ஆண்மகன். தாய் குடிபோதைக்கு அடிமையானவர். வறுமையில் உழன்றவன் தனது 8 வயதிலேயே எடுபிடியாய் ஒரு சீனரின் கார் பழுது பார்க்கும் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தான். அங்கேயே பல வருடம் வேலை செய்து நல்ல பெயர் எடுத்தான், தொழில் கற்றுக்கொன்டான், முதலாளியின் வலது கரமாய் இயங்கினான். சீனன் பெரிய கேடி, திருட்டுகார் உபரி பாகங்கள் வாங்கி வினியோகிப்பவன், விடயம் வீதிக்கு வந்தது. நீதி நெறி வழுவா காவல்துறை இரும்புக்கரம் கொன்டு அந்த அராஜகத்தை முறியடித்தது, எப்படி? இந்த வாலிபன் இருக்கிறானே, அவன் அப்பொழுதுதான் தான் விரும்பியவளை கரம்பிடித்து ஒரு ஆண் மகவுக்கு தந்தையாகியிருந்தான், அவன் தான் முதாலாளிக்குத் தெரியாமல் இப்படி செய்துவிட்டான் என்று சாட்சியங்களோடு நிரூபித்து ??? அது எப்படி கூலிக்கு வேலை செய்பவன் திருட்டு பொருட்களை முதலாளி அறியாமல் உபயோகிக்க முடிந்தது ? இப்படியெல்லாம் கேட்கக்கூடாது !! முழுதையும் கேளுங்கள், முதலாளி வாலிபனிடம் கண்ணைக்காட்டிவிட்டு நல்லவனாய் ஒதுங்கிக்கொன்டான், வாலிபன் எதிர்காலத்தை நினைத்தும் நினைக்காமலும் பழி ஏற்றுச் சிறைக்குச் சென்றான். அங்கே அவனுக்கு அனுதினமும் அடி உதைகள் வரும் போகும் அனைத்து அதிகாரிகளுக்கும் பூட்ஸ்கால்களால் உதைத்து விளயாடும் பந்தாகிப்போனான். அவன் கொஞ்சம் வத்தலான உடம்புக்காரன், வாங்கிய அடி உதைகளில் விலா எலும்புகள் முறிந்து , கையும் உடைந்து போனது . மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டான். என்ன காரணம் ? வேறென்ன இருக்கமுடியும் ? பாத்ரூமில் வழுக்கிவிழுவதைத் தவிர ? பாத்ரூம் என்ன தரையிலிருந்து பத்தடி உயரத்திலா இருக்கிறது? கீழே விழுந்தால் விலா எலும்புகளும் முறிய? அனைவரும் உண்மை அறிந்திருந்ததால் யாரும் எதிர்க்கேள்வி கேட்கவில்லை 🙁
முதலாளி அவன் நிலையறிந்து கொஞ்சம் துனுக்குற்றான், அவன் இறந்து விடுவதற்குள் காப்பாற்றினான், அதையும் எப்படி என்று யாரும் கேட்கக்கூடாது. வாலிபன் கிழிந்த நாராய் வெளியே வந்தான். ஒரு பெரும் தொகையைக் கொடுத்து முதலாளி அவனுக்கு வேறிடத்தில் வியாபாரம் ஆரம்பித்துத் தந்தான். அந்த அதிர்க்ஷ்டக்கார வாலிபன் இன்று செல்வச் செழிப்புடன் வாழ்கிறான். கதை முடிந்தது. இல்லையில்லை இன்றும் தொடர்கிறது வெவ்வேறு பெயர்களில், ஆனால் அனைவரும் இந்த வாலிபன்போல் அதிர்க்ஷ்டசாலி இல்லை, வருத்தம்தான்.
1. இப்படி அடிக்கடி லோக்கப்பில் ஏற்படும் மரணங்களுக்கு நியாயம் நமக்கு கிடைக்க வேண்டும்; இதில் மாற்றுக் கருத்தேமில்லை.
2. “வீடுப் புகுந்து திருடியதாகச் சந்தேகப் படும்” – இது யோசிக்க வேண்டிய விஷயம். பிள்ளையைப் பெற்றவர்களுக்கு தன் பிள்ளைகள் எங்கு செல்கின்றார்கள், என்ன செய்துக் கொண்டிருக்கின்றார்கள் இவையெல்லாம் பெற்றவர்கள் கண்காணிப்பதில்லையா? ஆரம்பத்திலே கண்காணித்திருந்தால் தேவையில்லாத இந்த சம்பவங்களேன் , லோக்கப் மரணங்களேன்? நம்மில் பலப் பெற்றோர்கள் இன்றும் பொறுப்பில்லாமல் இப்படித்தான் வாழ்கின்றார்கள்; பள்ளிச் செல்லும் சிலப் பிள்ளைகள் குறிப்பாக இடைநிலைப் பள்ளிப் பிள்ளைகள் ஒழுங்காக பள்ளிச் செல்வதில்லை.; இவையெல்லாம் பெற்றோர்களுக்குத் தெரியாதா? ஆசரியர்கள் எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்துக் கொள்ள முடியும்; கண்டிக்க முடியும். பிரச்சனைகள் முற்றிப் போனப் பிறகு பின் வருந்துவது வீண்.? 3. மேலும் தன் பிள்ளைகளை கண்காணிப்பது ஒவ்வொருப் பெற்றோரின் கடமை; சுற்றித் திரியும் தங்கள் பிள்ளைகளை என்ன எதுவென்று கொஞ்சமும் கேட்பதில்லை. என்றாவதொரு நாள் நமக்கு வேண்டப் படாதவர்கள் அல்லது காவற்த் துறையினரே நம் வீட்டுக் கதவைத் தட்டுகின்ற நிலை ஏற்படலாம்; அதிர்ச்சியாகவுமிருக்கலாம்; அப்போது அது காலம் கடந்தச் செயலாகயிருக்கும். நாம் பொறுப்போடிருந்து எல்லாவற்றையும் முளையிலேயே கிள்ளியெறிந்தாள் நாம் எதிர்நோக்கும் பலச் சிரமங்களையும் தவிர்க்கலாம்; பொன்னான நேரங்களையும் மிச்சப் படுத்தலாம்.. இந்தவுண்மையை ஒவ்வொருவரும் இனிமேலாவதுயுணர்ந்து செயல்படுவோம்
இங்குஇரக்ககுணமுள்ள நல்ல உள்ளங்கள்
பதிவேற்றிய கருத்துக்கள் அறுமை,நான்
சிலவற்றையும் கூறுகிறேன்,ஒரு முஸ்லிம்
மாமாகடையில் ஒரு இந்தியர் முதுகிலிருந்து
அறுவாளை எடுத்து மிரட்டி முந்தைய நாள்
பணம்,அன்றைய வியாபார பணம்,போனையும் பரித்துக்கொண்டான்,
மற்றது கண்ணாள் பார்த்த காட்சி இரண்டு
இந்திய இளவயது 19வயது வயதுஇருக்கலாம்
பைக்கிலிருந்து ஒருவன் இரங்கினான்
மலாய்கார,அல்லது இந்தோபெண்ணா
முக்காடு போட்டு போன் பேசிக்கொண்டு
நடந்து போனார்,பைக்கிலிருந்துஇரங்கிய
வன்போனை பரிக்கவும் இன்னொருவன்
திரும்பி வரவும் மின்னலாக மறைந்தார்கள்
அவர்கள் ஒரு குழுவாக காப்பிக்கடையில்
மது அருந்துவதாக கேள்விப்பட்டேன்!
மனித உயிர்களை பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை, காவல்துறை உள்பட. ஆனால் இந்த உயிர்கள் வெளியே நடமாடும் போது மற்றவரின் உயிரைப் பறிப்பதற்கு தயங்குவதில்லை. வெளியே இருக்கும் போது மற்றவர்களுக்கு ஆபத்து. உள்ளே இருந்தாலோ அவர்களுக்கே ஆபத்து! வேறு என்ன சொல்லுவது?