நஜிப்: சவூதியிலும் பிரிம், ஜிஎஸ்டி

najibபிரிம்  ரொக்க  உதவி   வழங்கப்படுவதையும்  பொருள்,  சேவை   வரி(ஜிஎஸ்டி)யையும்    நியாயப்படுத்தும்   முயற்சியாக    சவூதி அராபியாகூட   அதன்   வ்சதி  குறைவான  மக்களுக்கு    ரொக்க   உதவி   கொடுக்க   எண்ணியிருப்பதாக   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    கூறினார்.

மலேசியாவுக்கு      அதிகாரப்பூர்வ     வருகை    மேற்கொண்டுள்ள   சவூதி  மன்னர்    சல்மான்  அப்துல்   அசிசுடன்   வந்துள்ள  சவூதி    அராபிய    அமைச்சர்களிடம்   பேசியதிலிருந்து    அது    தெரிய   வந்ததாக    நஜிப்    கூறினார்.

“நேற்று   சில   சவூதி   அராபிய    அமைச்சர்களுடன்    பேசினேன்.   சவூதி   அரசாங்கமும்   அங்குள்ள  ஏழை   மக்களுக்குப்  பண  உதவி    செய்வதற்காக   வங்கிக்   கணக்குகள்   திறப்பதற்கு    தொடக்கநிலை   ஏற்பாடுகளைச்   செய்து   வருகிறது.

“முன்னாள்   பிரதமர்    டாக்டர்   மகாதிர்   முகம்மட்    பிரிம்    ஒரு  வகை   ஊழல்   என்று   கூறுகிறார்  ஆனால்,  இப்போது   சவூதி    அராபியாவும்   அதைக்    கொடுக்கிறதே   அதை   என்னவென்பது?

“அதனால்தான்   அதை    அரசியலாக்காதீர்கள்    என்றேன்.  பிரிம்,   ஊழல்   அல்ல,  அது    வறிய  மக்களுக்கு    அலிக்கப்படும்    உதவி.

“பிரிம்   உதவி   பெறுவோர்   பிஎன்னைத்தான்   ஆதரிக்க    வேண்டும்    என்று   நாங்கள்  ஒருபோதும்   சொன்னதில்லை”,  என  இன்று   கோலாலும்பூரில்    ஒரு   நிகழ்வில்   பேசியபோது    நஜிப்   கூறினார்.