அக்ரோபேங்க், ஊழலுக்கும் அதிகாரமீறல்களுக்கும் எதிராக மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) நடத்தும் போராட்டத்துக்கு உதவியாக ஊழலற்ற நிறுவனமாக திகழ்வதாய் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறது. அதுவே, அவ்வாறு உறுதிமொழி எடுத்துக்கொண்ட முதலாவது நிதிக் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உறுதிமொழி எடுத்துக்கொள்வதுடன் கையொப்பமிடும் நிகழ்வும் நேற்று மலாக்கா ஆயர் கெரோவில் ஒரு தங்கு விடுதியில் நடந்ததாக எம்ஏசிசி ஓர் அறிக்கையில் தெரிவித்தது.