வட கொரிய தொடர்புள்ள இரு நிறுவனங்களின் பதிவை இரத்தாக்க நடவடிக்கை

igpவட  கொரியாவின்  உளவு   நிறுவனம்   ஒன்றுடன்   தொடர்பு  வைத்துள்ள    இரண்டு   மலேசிய   நிறுவனங்களின்   பதிவை   இரத்து   செய்யும்   நடவடிக்கை   மேற்கொள்ளப்பட்டிருப்பதாக    போலீஸ்   படைத்    தலைவர்   காலிட்   அபு   பக்கார்   கூறினார்.

இண்டர்நேசனல்  குளோபல்   சிஸ்டம்   சென். பெர்ஹாட்,    இண்டர்நேசனல்    கோல்டன்   சர்விசஸ்  சென். பெர்ஹாட்  ஆகியவையே   அவ்விரண்டுமாகும்.

அவ்விரண்டுக்கும்   கோலாலும்பூர்,  லிட்டல்  இந்தியாவில்  அமைந்திருக்கும்   வட  கொரிய   உளவாளிகளால்   நடத்தப்படும்   குளோகோம்    என்ற   நிறுவனத்துடன்    தொடர்புள்ளதாக    ராய்ட்டர்ஸ்    செய்தி  ஒன்றிலிருந்து   தெரிய   வந்ததாக    காலிட்   கூறினார்.