ஒங் தி கியாட் மசீசவிலிருந்து விலகினார்: காரணம் சொல்ல தயக்கம்

mcaமுன்னாள்  போக்குவரத்து   அமைச்சரும்  30 ஆண்டுகள்  உறுப்பினராகவும்   எட்டாண்டுகள்   அதன்  தலைவராகவும்   இருந்த   ஒங் தி கியாட்   மசீச-விலிருந்து  விலகினார்.

சைனா பிரஸ்  முதன்முதலாக   வெளியிட்டிருந்த      அவரது கட்சி விலகல்    செய்தி  உண்மைதான்   என்பதை    ஒங்   மின்னஞ்சல்வழி   மலேசியாகினியிடம்   உறுதிபடுத்தினார்.

ஆனால்,  தமது விலகலுக்கான காரணத்தைத்  தெரிவிக்க  அவர்  மறுத்தார். அதன்   தொடர்பில்   ஓர்    அறிக்கைகூட   வெளியிடவில்லை   என்றார்.

“நான்  ஒரு  சிறு  மனிதன்.  அறிக்கை  எல்லாம்   தேவையில்லை”,  என  மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

கட்சியில்  இருப்பது   பொருத்தமில்லை   என்று  பட்டதால்   விலக  முடிவு  செய்ததாக  ஒங்   கூறினார்.

வேறு   எந்தக்  கட்சியிலும்   சேரும்   எண்ணம்   அவருக்கு  இல்லை.  கலாச்சாரம்   தொடர்பான  பணிகளிலும்   வணிகத்திலும்  முழுக்  கவனம்   செலுத்தப்போகிறார்.   நூல்  எழுதும்   எண்ணமும்   உண்டு.