தோக் பா: பாஸ் கிளந்தான் அம்னோவின் எதிரி

 

Tokpahசமய விவகாரங்களில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் ஒத்துழைக்கலாம். ஆனால், தேர்தல் விவகாரத்தைப் பொறுத்தவரையில் கிளந்தானில் அவர்கள் எதிராளிகள் என்று மாநில அம்னோ தலைவர் முஸ்தாபா முகமட் கூறுகிறார்.

கிளந்தான் பாஸ் கட்சியால் 1990 லிருந்து தொடர்ந்து ஆளப்பட்டு வருகிறது. அதை பாஸிடமிருந்து கைப்பற்றுவதற்கு மிகைப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முஸ்தாபா தெரிவித்தார்.

“பாஸ், பிகேஆர், அமனா மற்றும் பூ (பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா) ஆகியவை நமது எதிரிகள்.

“எம்சிஎ, எம்ஐசி (மற்றும் இதர பங்காளிக் கட்சிகள் நமது நண்பர்கள். அதுதான் உண்மையான நிலை.

“கிளந்தானில் நமது விரோதி பாஸ்”, என்று நேற்று கோட்டாபாருவில் நடைபெற்ற ஒரு பிஎன் கூட்டத்தில் அவர் கூறினார்.

பாஸ் தலைவர்கள் பிஎன்னையும் பிரதமர் நஜிப்பையும் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அதனால்தான் அரசியல் போட்டியைப் பிரகடனம் செய்துள்ளோம் என்றாரவர்.