வட கொரியாவில் உள்ள 11 மலேசியர்களும் தடுத்து வைக்கப்படவில்லை என்பதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தியுள்ளார்.
“அவர்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ள எந்தத் தடையுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தடுத்து வைக்கப்படவில்லை.
“அவர்கள் (வீட்டைவிட்டு) வெளியில் சென்று வழக்கமான காரியங்களில் ஈடுபட முடிகிறது.
“ஆக, அவர்களின் பாதுகாப்பு குறித்து கவலையுற வேண்டியதில்லை”, என நஜிப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிணையாளி என்று முன்னர் பிரதமர் கூறியது பொய்யா ?