வீடமைப்பு ஊழல்: ஜோகூர் எக்ஸ்கோ கைது

johorவீடமைப்பு, நில ஊழல் தொடர்பில் ஜோகூர் ஆட்சிமன்ற உறுப்பினர் அப்துல் லத்திப் பாண்டி இன்று கைது செய்யப்பட்டார்.

ஜோகூர் பாருவில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அலுவலகத்துக்கு விசாரணைக்காக சென்றபோது அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.

அவர் கைதானதை இன்று பெட்டாலிங் ஜெயாவில் த ஸ்டார் அலுவலகம் வந்திருந்த எம்ஏசிசி தலைமை ஆணையர் சுல்கிப்ளி அமாட்டும் உறுதிப்படுத்தினார்.

இதற்குமுன்பு எம்ஏசிசி, பூமிபுத்ரா நிலப் பட்டாக்களை மாற்றிய விவகாரம் தொடர்பில் ஐவரைக் கைது செய்திருந்தது.

அவர்களில் அப்துல் லத்திப்பின் மகனும் அவரின் சிறப்பு அதிகாரியும் இடம்பெற்றுள்ளனர். இவ்வழக்கு தொடர்பில் எம்ஏசிசி 26 ஆடம்பர ஊர்திகளைப் பறிமுதல் செய்திருப்பதுடன் 45 வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைத்துள்ளது.