முன்னாள் பிரதமர் மகாதிருக்கும் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் 1எம்டிபி மீதான விவாதத்தை நேரடி ஒளிபரப்புச் செய்யுமாறு தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்கை டிஎபி நாடாளுமன்ற மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார்.
பாடாங் ரெங்காஸில் நடைபெறவிருக்கும் இந்த மகாதிர்-நாஸிர் விவாதத்தை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் ஏனென்றால் நாட்டின் வரலாற்றில் அரசாங்க ஊழல்களுக்கெல்லாம் தாயாக விளங்கும் 1எம்டிபி ஊழல் பற்றிய விவாதத்தை நாடு முழுவதிலுமுள்ள மலேசியர்கள் அனைவரும் காணமுடியும் என்று கிட் சியாங் இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இன்று வரையில் இந்த விவகாரம் மூடிமறைக்கப்பட்டுள்ளதால் இந்த விவாதம் முக்கியமானது என்று லிம் கூறினார்.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்பதால் தாம் 1எம்டிபி மீதான பாடாங் ரெங்காஸ் விவாதத்தை தாம் வரவேற்பதாக லிம் மேலும் கூறினார்.
அந்த அளவுக்கு விதை கிடையாது,இறுதி நேரத்தில் தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று வரலாம்.பொறுத்திருந்து பார்ப்போம்.