அன்வார் இப்ராகிம் சிறையில் இருந்தாலும் அவர் எதிரணியை வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒரு இடைக்காலத் தலைவரை முடிவு செய்வது முக்கியமாகும் என முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் கூறினார்.
அது, ஒரு வேளை எதிரணி புத்ரா ஜெயாவை வென்றால் அடுத்த பிரதமர் யார் என்று முடிவு செய்ய இயலாமல் எதிரணித் தலைவர்கள் திணறிக் கொண்டிருக்கும் நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என ஜைட் அவரது வலைப்பதிவில் தெரிவித்திருந்தார்.
எதிரணி பல பிரச்னைகளை எதிர்நோக்குவதாகக் கூறிய ஜைட், அங்கு பலரும் பிரதமராக நினைப்பது ஒரு பிரச்னை என்றார். அன்வார் வாய் திறந்தால் இந்த விவகாரத்துக்கு முடிவு கட்டலாம் என்றார்.