பிஎன்னை வெளியேற்றுங்கள், வாக்காளர்களுக்கு மகாதிரின் வேண்டுகோள்

 

Mshowthedoorஇந்நாட்டை நேசிக்கும் அனைத்து மலேசியர்களும் அடுத்தப் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று முன்னாள் பிரதார் மகாதிர் முகமட் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

பெர்சத்து கட்சியின் தலைவரான மகாதிர், அவரது கட்சித் தலைவர்களுக்கும், எதிரணியின் தலைவர்களுக்கும் மலேசியாவை நிருவாகம் செய்யவும், மேம்படுத்தவும், அழிவிலிருந்து காப்பாற்றவும் தேவையான அனுபவமும் திறன்களும் இருக்கின்றன என்று மகாதிர் கூறினார்.

“நமது நோக்கம் இந்த கொடுத்து வைத்த பூமியை பழைய நிலைக்கு கொண்டுவருவதாகும். இதற்கு நாம் அரசாங்கத்தை 14 ஆவது பொதுத் தேர்தலில் மாற்ற வேண்டும்”, என்றாரவர்.

“ஒரு காலத்தில் அம்னோவின் தலைவராக இருந்த நான் அக்கட்சியை விட்டு விலக முடிந்தது என்றால், மலேசியாவை நேசிக்கும் மக்களும் அவ்வாறே செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவர் கூறியதாக மகாதிரை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, ஹரப்பான் கூட்டணியில் இணையும் பெர்சத்துவின் நோக்கத்தை மகாதிர் வெளியிட்டார். ஆனால், அக்கூட்டணியின் பெயரை மாற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.