ஐஎஸ் தொடர்புள்ள அபு சாயாவ் பயங்கரவாதிகளால் எட்டு மாதங்களாக பிணைபிடித்து வைக்கப்பட்டிருந்த இரு மலேசியரை பிலிப்பீன்ஸ் படையினர் மீட்டுள்ளனர்.
தாயுடின் அஞ்சுட், 45, அப்டுரகிம் சுமாஸ், 62, ஆகிய இருவரும் தென் சூலு மாவட்டத்தில் பாடா தீவுக்கு அப்பால் மீட்கப்பட்டதாக மேற்கு மிண்டானாவ் தளபத்திய ஆணையாளர் மேஜர்-ஜெனரல் கார்லிடோ கேல்வஸ் ஜூனியர் கூறினார்.
கடந்த ஆண்டு ஜூலையில் மலேசிய மாநிலமான சாபாவை அடுத்து ஒரு இழுவைப் படகிலிருந்து ஐவர் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் அவ்விருவரும் அடங்குவர் என கேல்வஸ் குறிப்பிட்டார். இருவரும் “மோசமான உடல்நிலையில் இருப்பதாக” அவர் தெரிவித்தார்.
சூலுவில் இராணுவ மருத்துவர்கள் அவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.