கிட் சியாங்: என்னைக் காணவில்லை என்று கூறும் சுவரொட்டிகளுக்கு நாளை பதிலளிப்பேன்

kitடிஏபி     நாடாளுமன்றத்      தலைவர்      லிம்  கிட்  சியாங்,   கேளாங்   பாத்தா   தொகுதியில்    தம்மைக்    காணவில்லை    என்று  பரவலாக   ஒட்டப்பட்டுள்ள  சுவரொட்டிகளுக்கு     நாளை    மறுமொழி   அளிக்கப்படும்    என்று   கூறியுள்ளார்.

கோலாலும்பூரில்    நாடாளுமன்றக்   கூட்டத்தில்     கலந்து   கொண்டிருக்கும்   லிம்,    நாளை   மாலை   கேளாங்    பாத்தாவில்     அவ்விவகாரம்   குறித்து    பேசப்போவதாகக்   கூறினார்.

“இன்று  முடியாது.   இன்றிரவு   கூலிமிலும்    நாளைக்   காலை   அலோர்   ஸ்டாரிலும்   இருப்பேன்.  இதற்கு  நாளை  மாலை   கேளாங்   பாத்தாவில்   மறுமொழி   கூறுவேன்”,  என  லிம்   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

கேளாங்  பாத்தாவில்   டிஏபி   சேவை   மையத்துக்கு    அருகில்     சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டிருப்பதாக   ஊடகங்கள்    அறிவித்துள்ளன.

“கேளாங்   பாத்தாவில்  கடைசியாக   505-இல்  பார்த்தது.  வானத்தைக்  கொண்டு   வருவேன்,  பூமியைக்   கொண்டு   வருவேன்   என்றெல்லாம்   வாக்குறுதி   அள்ளி  வீசினார்.  90  வயதினர்   அல்லது   அதைவிட  மூத்தவர்களுடன்   இருப்பதுதான்  இவரின்  பொழுதுபோக்கு.  காணாமல்போய்   பல   மாதங்கள்  ஏன்   ஆண்டுகள்கூட  ஆகிவிட்டன.  தயை   செய்து  அவரைக்  கண்டுபிடியுங்கள்.  அவரது  பிரிவு   வாட்டுகிறது”,  என்று  அந்தச்  சுவரொட்டிகளில்   எழுதப்பட்டுள்ளது.

அருகில்  ஒரு  பதாதையில்  “லிம்   கிட்  சியாங்   மாமா   எங்கே?  அவரைக்  காணாமல்  கேளான்ங்  பாத்தா   தவிக்கிறது”,  என்று  எழுதப்பட்டிருந்ததாக   த  ஸ்டார்   கூறியது.