13 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் வெற்றி கண்ட செமினி தோட்டத் தொழிலாளர்கள்

 

After13years1தங்களுடைய முன்னாள் தோட்ட முதலாளியான சைம்டார்பியுடன் 13 ஆண்டுகால போராட்டம் நடத்தி செமினி   தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

17 குடும்பங்களைச் சேர்ந்த 21 தொழிலாளிகள் ஒன்றரை மாடி குறைந்த விலை வரிசை வீடுகளைப் பெறுவதோடு 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்ட போது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணி நீக்க நன்மைகள் கொடுக்கப்படாமல் பிடித்து வைக்கப்பட்டிருந்ததும் கொடுக்கப்படும்.

இத்தொழிலாளர்கள் ஏப்ரல் 1, 2004 இல் வேலை நீக்கம் செய்யப்பட்டு தோட்டத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டனர். தொழிலாளர்கள் வெளியேற மறுத்து தங்களுடைய போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இவ்விரு தரப்பினர்களுக்கிடையிலான இந்த ஒப்பந்தம் இவ்வாண்டு பெப்ரவரி 28,இல் கையொப்பமிடப்பட்டது.after13years2

தோட்டத் தொழிலாளர்களின் இந்த 13 ஆண்டுகால போராட்டத்தில் மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் (பிஎஸ்எம்) எஸ். அருட்செல்வம் இரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களுக்கு பேருதவி வழங்கினார்.

இந்த விவகாரத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் மற்றும் தற்போதைய ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவும் உதவிகள் அளித்துள்ளனர்.