ஆய்வு: பிரிம் தொடர்வதையே மலேசியர்கள் விரும்புகிறார்கள்

brimமலேசியர்களில்   பெரும்பாலோர்   அரசாங்கம்   1மலேசியா   மக்கள்   உதவித்   திட்ட(பிரிம்)த்தின்வழி   அளிக்கும்   நிதிஉதவியைப்  பெரிதும்   வரவேற்பதை     அண்மையில்   மேற்கொள்ளப்பட்ட    ஆய்வு  ஒன்று      காண்பிக்கிறது.

காஜிடாடா  ஆய்வு   மையம்,   பேராசிரியர்   சைட்   அராபி   ஐடிட்   மேற்பார்வையில்     1,031    பேரிடம்   தகவல்    சேகரித்தது.  அவர்களில்  68.7   விழுக்காட்டினர்   பிரிம்   உதவித்  தொகை  கொடுக்கப்படுவதைப்   பாராட்டினார்கள். அது   ஒரு  வகை    கையூட்டு    என்று   கூறப்படுவதை  63.9  விழுக்க்காட்டினர்   ஒப்புக்கொள்ளவில்லை.

71.1  விழுக்காட்டினர்   பிரிம்  தொடர்ந்து   கொடுக்கப்பட   வேண்டும்    என்று   கூறியதில்   ஆச்சரியமில்லை     என்று   டாக்டர்   சைட்   அராபி   கூறினார்.

65.1  விழுக்காட்டினர்   ப்ரிம்   தங்களின்   பணச்சிக்கலுக்குத்  தீர்வுகாண  உதவியதாகக்  கூறினார்கள்  என   அனைத்துலக   இஸ்லாமிய   பல்கலைக்கழகத்தின்  முன்னாள்     தலைவரும்  காஜிடாடாவின்  ஆலோசகருமான   சைட்  அராபி   தெரிவித்தார்.