கிட் சியாங் மீதான கட்டுரைப் போட்டி பரிசுத் தொகையை ரிம50,000 ஆக அனுவார் உயர்த்தியுள்ளார்

 

Anuuarupscontestprizeடிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஓர் இனவாதி மற்றும் சர்வாதிகாரி என்று கூறியிருந்த அம்னோவின் தகவல் பிரிவு தலைவர் அனுவார் மூசா, அவரின் இத்தன்மைகள் குறித்து எழுதப்படும் மிகச் சிறந்த கட்டுரைக்கு அவர் அறிவித்திருந்த பரிசுத் தொகையை ரிம50,000 க்கு உயர்த்தியுள்ளார்.

இன்று அனுவார் வெளியிட்ட ஓர் ஊடக அறிக்கையில் பலர், குறிப்பாக முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட், லிம் ஓர் இனவாதி, இஸ்லாத்தை எதிர்ப்பவர், மலாய்க்காரர்களை எதிர்ப்பவர் மற்றும் ஒரு சர்வாதிகாரி என்றெல்லாம் குற்றம் சாட்டியுள்ளனர் என்று அனுவார் கூறுகிறார்.

இக்குற்றச்சாட்டுகள் பற்றி உங்களிடம் ஆதாரம் இருந்தால், கருத்துகள் மற்றும் தகவல் இருந்தால், அதை கட்டுரை அல்லது வேறெந்த வகையிலாவது தமக்கு அனுப்பி வைக்குமாறு அனுவார் கேட்டுக் கொண்டுயுள்ளார்.

“அதற்கான பரிசு ரிம50,000 உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது”, என்று அனுவார் அறிவித்துள்ளார்..

நேற்று, நாடாளுமன்றத்தில் இந்தப் போட்டிக்கான பரிசுத் தொகை ரிம10,000 என்று செயதியாளர்களிடம் கூறியிருந்தார்.