டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இனவாதியா என்பது பற்றிய கட்டுரைக்கு ரிம50,000 ஐ அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா கொடுப்பதற்கு மாற்றாக அதை யுனிவர்சிட்டி கோலாலம்பூர் (யுனிகேஎல்) மாணவர்களுக்கு கொடுப்பது நல்லதாகும் என்று பிகேஆரி உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி ஆலோசனை கூறினார்.
அப்பல்கலைக்கழக மாணவர்கள் நிதி நெருக்கடியினால் அவதிப்படுகின்றனர். அனுவார் மூசா அப்பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் என்ற முறையில் அம்மாணவர்களுக்கு உதவாமல், அவருடைய அரசியல் விரோதிகளை மட்டம்தட்டுவதற்காக ரிமா50,000 பரிசு அளிப்பது அவரது பொறுப்பற்ற செயலைக் காட்டுகிறது என்று ரஃபிஸி கூறினார்.
அனுவார் மூசா மாரா தலைவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், ஆனால் தொடர்ந்து சம்பளம் பெறுகிறார் என்பதை நினைவூட்டிய ரஃபிஸி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பூமிபுத்ரா மாணவர்கள் இன்னும் உபகாரச்சம்பளம் கிடைக்காமல் இருக்கிறார்கள் என்றார்.
ஆகவே, அனுவார் அவரது முதல் கடமைக்கு முன்னுரிமை அளித்து அவரது கண்காணிப்பிலிருக்கும் மாணவர்களின் நலனில் கவனம் செலுத்தும்படி அவருக்கு ஆலோசனை கூறுவதாக ரஃபிஸி மேலும் கூறினார்.
மேலும், அனுவார் பரிசாக கொடுக்க முன்வந்துள்ள ரிம50,000 ஐ உபகாரச்சம்பளமாக மாற்றி நிதி உதவி தேவைப்படும் சிறந்த அடைவுநிலையைப் பெற்ற யுனிகேஎல் மாணவர்களுக்கு அளிக்கும்படியும் ஆலோசனை கூறுவதாக ரஃபிஸி கூறினார்.
அப்படி என்றால் பரிசு தொகையை ஒரு லட்சமாக மாற்றி விடுங்கள்!