மகாதிர்: கிராம மக்களுக்கு 1எம்டிபி என்றால் புரியாது, ஆனால் ஜிஎஸ்டி தெரியும்

 

VillagefolksMகிராம மக்களால் 1எம்டிபி போன்ற ஊழல் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் அவர்களுக்கு வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு சம்பந்தப்பட்ட முணுமுணுப்புகள் இருக்கின்றன என்று பெர்சத்துவின் தலைவர் மகாதிர் கூறுகிறார்.

ஜிஎஸ்டி அவர்களுக்குப் புரியும். வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு அவர்களுக்குப் புரியும், பெட்ரோல் விலை அதிகரிப்பு அவர்களுக்குத் தெரியும், அவர்களின் குழந்தைகளுக்கு உபகாரச்சம்பளம் கிடைக்காதது அவர்களுக்குத் தெரியும் என்று கெடாவில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் கூறினார். இது முகநூல் வழியாக நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.

பிரதமர் நஜிப்பின் நிலை 13 ஆவது பொதுத் தேர்தலின் இருந்ததைவிட இப்போது மிக நிச்சமற்றதாக இருக்கிறது. 1எம்டிபி மற்றும் ஜிஎஸ்டி போன்றவை இப்போது இருக்கின்றன என்றாரவர்.

இவை பெரும் பிரச்சனைகள் ஆகும். இப்பிரச்சனைகள் மக்களின் ஆதரவை பக்கத்தான் ஹரப்பான கூட்டணியிலுள்ள எதிர்க்கட்சிகள் பக்கம் ஈர்க்கும் என்று கூறிய மகாதிர், “இப்போதுள்ள நிலைமை வேறானது. நமக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது நான் நம்புகிறேன்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.

அடுத்தப் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறுவதற்கு அக்கட்சிகளிடம் முன்பைவிட அதிகமான ஒற்றுமை இருக்க வேண்டும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

பெரிதும் எதிர்பாக்கபடும் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சர் நஸ்ரியுடனான விவாதம் பற்றி குறிப்பிட்ட மகாதிர், அதை முடிந்த அளவிற்கு பரவலாக ஒலிபரப்பப்படுவதை விரும்புவதாக அவர் கூறினார்.