எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபராக் சுமார் 6 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் இன்று விடுதலையாகி வீடு திரும்பினார்.
முப்பது ஆண்டுகளுக்கு எகிப்தின் அதிபராக ஆட்சி செய்த முபராக் 2011 ஆம் ஆண்டில் எகிப்தில் நடந்த புரட்சியில் வீழ்த்தப்பட்டார்.
2011 ஆம் ஆண்டில் நடந்த புரட்சியின் போது கொல்லப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியல்ல என்று மூன்று வாரங்களுக்கு முன்னர் எகிப்திய நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்புக்கு பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
88 வயதான முபராக் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் கிழக்கு கைரோவில் இருக்கும் அவரது இல்லத்திற்கு திரும்பினார்.