நாடற்ற குழந்தைகளுக்கு மரபணு ஒத்திருப்பு போதாதா?, ஃபிரிடம் கேட்கிறது

 

DNAmatchபெற்றோர் உறவை நிர்ணயிப்பதற்கு “மறுக்க முடியாத ஆதாரம்” மரபணு ஒத்திருப்பு. அந்த ஆதாரத்தை ஏற்க தேசிய பதிவு இலாக (என்ஆர்டி) ஏன் மறுக்கிறது என்று குடிமக்கள் அமைப்பான ஃபிரிடம் கேட்கிறது.

பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் அவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள குடியுரிமைக்கான உரிமையைப் பெற அவர்கள் இன்னும் என்னதான் செய்ய வேண்டும் என்று ஃபிரிடம் அமைப்பின் பேச்சாளர் என். கணேசன் கேட்கிறார்.

சட்டத்திற்கு முறையான விளக்கம் பெற என்ஆர்டி ஏன் சட்டத்துறை அலுவலகத்தை நாடவில்லை என்று அவர் கேட்கிறார்.

“ஒரு வேளை, அட்டர்னி-ஜெனரலின் அலுவலகமும் அதே கருத்தைக் கொண்டிருக்கிறதா?”, என்று அவர் மேலும் கேட்டார்.

பொருத்தமில்லாத காரணங்கள்

பினாங்கைச் சேர்ந்த சூரியா, 12, அகிலாண்டேஸ்வரி, 11 மற்றும் துவாரநாயகி, 10, ஆகிய மூவருக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை கணேசன் குறிப்பிடார்.

அக்குழந்தைகளின் மலேசிய தகப்பனார் எம். வெங்கடேஸ்வரன் இப்பிரச்சனைக்குப் பரிகாரம் காண்பதற்கு பல ஆண்டுகளாக முயன்று1hind ganesan வருகிறார். ஆனால், அரசாங்கம் “வீண் பிடிவாதமாகவும் நியாயமற்ற முறையிலும்” அவரது கோரிக்கையை நிராகரித்து வருகிறது என்று கணேசன் மேலும் கூறினார்.

தங்களுடைய நடத்தையை நியாயப்படுத்துவதற்கு அந்த இலாகா பொருத்தமற்ற காரணங்களைக் கூறுவதாக அவர் தெரிவித்தார்.

ஜூன் 2016 இல் ஜபதான் கீமியா மேற்கொண்ட ஒரு மரபணு சோதணை வெங்கடேஸ்வரனின் தந்தை வழி உறவை உறுதிப்படுத்தியது. அந்த மரபணு சோதணை அறிக்கை இருந்தும், அக்குழந்தைகளின் தாயார் உடனில்லாததால், அதை ஏற்றுக்கொள்ள பினாங்கு மற்றும் புத்ராஜெயா என்ஆர்டி அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்றார் கணேசன்.

அந்த அதிகாரிகளின் நடத்தை பெடரல் அரசமைப்புச் சட்டத்திற்கு [Part II Second Schedule [Article 14(1)(b)] முற்றிலும் முரணானது என்று
கணேசன் கூறினார்.

குடியுரிமை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அரசாங்க அதிகாரிகள் ஏன் பெடரல் அரசமைப்புச் சட்ட ஆளுமைக்கு உட்பட்டவர்களாக இருக்கவில்லை என்று கேட்டார்.

அந்த அதிகாரிகளின் நடத்தைகள் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டிருக்கவில்லை என்று குடிமக்கள் முடிவெடுக்கலாமா?

அந்த அதிகாரிகள் சட்ட வரம்பு மீறி செயல்படுகின்றனர் என்பதோடு நமது நாட்டில் முழுமையான சட்ட ஆளுமை இல்லை என்றும் கணேசன் கூறினார்.