அம்னோவுக்குத் திரும்ப மாட்டேன்: முகைதின் யாசின் திட்டவட்டம்

bersatuநஜிப்   அப்துல்   ரசாக்   அம்னோ  தலைவர்  பதவியிலிருந்து   விலகினாலும்கூட  தாம்   அம்னோவுக்குத்   திரும்பிச்   செல்லப்  போவதில்லை   என்று   அக்கட்சியின்   முன்னாள்  துணைத்  தலைவர்   முகைதின்   யாசின்   கூறினார்.

இப்போது,   பார்டி   பிரிபூமி  பெர்சத்து(பெர்சத்து)வின்  தலைவராக   உள்ள   முகைதின்   நேற்றிரவு   பேராக்,  பாடாங்   ரெங்காஸில்    அவரது   கட்சி    ஏற்பாடு   செய்திருந்த   ஒரு   நிகழ்வில்   கலந்துகொண்டார்  பேசினார்.

அப்போது   அவர்,  நஜிப்  தலைவர்   பதவியிலிருந்து  விலகினால்     அம்னோவுக்குத்   திரும்பிச்   செல்லும்   எண்ணம்  உண்டா   என்று  கேட்கப்பட்ட  சம்பவத்தை   நினைவுகூர்ந்தார்.

“அதற்கு  நான்  என்  முடிவு  இறுதியானது   என்று   மறுமொழி  கூறினேன்”.

இப்படி   அவர்   சொன்னதும்   ‘ஹிடுப்   டான்ஸ்ரீ’   என்று  கூட்டத்தினர்   முழக்கமிட்டனர்.

“அம்னோவுக்குத்  திரும்பிச்  செல்வதில்   அர்த்தமில்லை.  அது    இனத்துக்காகவும்    சமயத்துக்காகவும்   நாட்டுக்காகவும்  போராடும்  கட்சியாக  இருந்தது,   ஒரு  காலத்தில்.  இப்போது   இல்லை”, என்றாரவர்.