டிஏபி அடிநிலை உறுப்பினர்கள் லிம் கிட் சியாங்கைக் கட்சி மத்திய செயல்குழுவுக்குத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருவது கட்சியில் அவருக்குள்ள முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது என்று டிஏபி உதவித் தலைவர் தெரேசா கொக் கூறினார்.
டிஏபி நிகழ்வு எங்கு நிகழ்ந்தாலும் அங்கு உரையாற்ற கிட் சியாங் அழைக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
“நேற்று, கிட் சியாங் அரசியலிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என அம்னோ அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் பேசியிருக்கிறார். டிஏபி அடிநிலை உறுப்பினர்கள் கட்சித் தலைமையில் மாற்றத்தை விரும்புகிறார்களாம்.
“அப்துல் ரஹ்மானின் கூற்று அபத்தமானது. ஆதாரமற்றது, வழக்கமான அம்னோ பிரச்சாரம்தான் அது”, என கொக் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
கிட் சியாங் டிஏபி தலைமைச் செயலாளர் அல்ல. அப்பதவியிலிருந்து அவர் விலகி 30 ஆண்டுகள் ஆகின்றன.
கிட் சியாங்மீது கவனம் செலுத்துவதை விடுத்து அப்துல் ரஹ்மான் பிரதமர் நஜிப் அப்துல் ரஹ்மானைப் பதவி விலகச் சொல்லி வலியுறுத்தலாம்.
“அப்படி கோரிக்கை விடுக்கும் துணிச்சல் அப்துல் ரஹ்மானுக்கு இருக்குமானால் அம்னோ அடிநிலை உறுப்பினர்களும் மலேசியர் பலரும் அதை வரவேற்பதைக் காண்பார்”, என திரேசா குறிப்பிட்டார்.
அந்த அம்னோ கம்மனாட்டிக்கு எப்படி புரியும்? அவன்களே ஆட்சியை தங்களின் கையில் வைத்து எல்லாவற்றையும் கொள்ளை அடித்து நாட்டை நாசமாக்கி தங்களின் வங்கி கணக்கை உயர்த்திக்கொண்டு எலும்பு துண்டுகளை அவன்களின் அடிவருடிகளுக்கு தூக்கி போட்டு இத்தனை ஆண்டுகள் சுகம் கண்ட பிறகு நியாயமாவது நீதியாவது?
செருப்பால அடிக்க வேணாம்.இத படிசாலே போதும்
good