கடந்த ஆண்டு லாஹாட் டத்துவுக்கு அப்பால் உள்ள கடலில் அபு சயாப் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட மேலும் மூன்று மலேசியர்கள் பிலிப்பினோ படைவீரர்களால் மீட்கப்பட்டிருப்பதைக் கிழக்கு சாபா பாதுகாப்புத் தளபத்யம்(எஸ்கோம்) உறுதிப்படுத்தியுள்ளது.
ஃபாண்டி பக்ரான்,27, முகம்மட் ஜமாடில் ரகிம், 24, முகம்மட் ரிட்சுவான் இஸ்மாயில், 33, ஆகிய மூவரும் நேற்றிரவு மீட்கப்பட்டதாக எஸ்கோம் டிசிபி தளபதி வான் அப்ட் பாரி வான் அப்ட் காலிட் கூறினார்.
“இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும். அவர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
அவர்கள், ஜூலை 18-இல், செருடோங் தீகா என்ற இழுவைப் படகிலிருந்து அபு சயாப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட ஐந்து பணியாளர்களில் மூவராவர்.
மற்ற இருவரும்- தாயுடின்,46, அப்ட் ரகிம் சும்மாஸ்,63,- ஏற்கனவே கடந்த வீயாழக்கிழமை பிலிப்பினோ படைவீரர்களால் காப்பாற்றப்பட்டு விட்டனர்.
நேற்றிரவு கேஎல் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அவ்விருவரும் பல மாதங்களுக்குப் பிறகு தங்கள் குடும்பத்தினருடன் இணைந்தனர்.
இன்று காலை எட்டு மணிக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தாமான் டூத்தாவில் உள்ள தமது அதிகாரத்துவ இல்லத்தில் அவ்விருவரையும் சந்தித்தார்.
பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரும் அப்போது அங்கிருந்தார்.
–பெர்னாமா