டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, இரண்டாவது நிதி அமைச்சர் ஜொகாரி அப்துல் கனியை நிதிதிரட்டும் விருந்து ஒன்றுக்கு அழைத்திருக்கிறார். அங்கு வந்து ஜோகாரி 1எம்டிபி தொடர்பில் அவர் தரப்பு வாதங்களை எடுத்துரைக்கலாம்.
மே 6ஆம் நாள் நடைபெறும் அவ்விருந்தில் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பார்டி அமனா நெகாரா(அமனா) தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி ஆகியோர் உரையாற்றுவார்கள் என்றாரவர்.
“அமைச்சர் எங்கள் வாயை அடைப்பதற்கு அது ஒரு நல்ல வாய்ப்பு”, என புவா ஓர் அறிக்கையில் கூறினார்.
கடந்த வாரம், ஜொகாரி அப்துல் கனி, புவாவுக்குத் திறந்த மடல் ஒன்றை வரைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 1எம்டிபி மீதான தொடர் தாக்குதலை புவா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
புவா நல்ல காரியங்களைச் செய்வார் என்ற நம்பித்தான் பெட்டாலிங் ஜெயா வாக்காளர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். அவர் அதை மறந்து 1எம்டி்பி- பித்துப் பிடித்து அலையக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பித்துப் பிடித்து அலைந்தால் பரவாயில்லை! சொத்துப்பிடித்து அலைவதற்கா மக்கள் உங்களை எல்லாம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்கள்?
ஐயா புவ அவர்களே அம்னோ நாதாரிகளுக்கு தெரியும் அவன்களின் திறமையை பற்றி — என்று அவன்களுக்கு தைரியம் வரும்?