பக்கத்தான் ஹரப்பான் ஆர்ஒஎஸ்சில் பதிவு செய்துகொள்ளவிருக்கிறது

 

Pakatanharapantoregisterஎதிர்க்கட்சிகளின், பெர்சத்து உட்பட, கூட்டணியான பக்கத்தான் ஹரப்பன் கழகங்கள் பதிவகத்தில் பதிவு செய்துகொள்ள தீர்மானித்துள்ளது.

பக்கத்தான் ஹரப்பானுக்கு புதிய பெயர் கொடுக்கப்பட வேண்டும் என்ற பெர்சத்துவின் ஆலோசனையை ஏற்பதில்லை என்று ஹரப்பான் தலைமைத்துவ மன்றம் முடிவு செய்துள்ளதாக அமனா தலைவர் முகமட் சாபு கூறினார்.

கூட்டணியின் 18 மூத்த தலைவர்களின் பெயர்களுடன் ஹரப்பான் பதிவு செய்யப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக முகமட் சாபு இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்குப் பின்னர் கூறினார்.

கூட்டணிக்கு பொதுவான சின்னம் மற்றும் பொதுத் தேர்தலுக்கான கொள்கை அறிக்கை ஆகியவற்றுக்கும் தலைவர்கள் ஒப்புகொண்டதாக அவர் தெரிவித்தார்.