அரசுப் பணியாளர்கள் அரசாங்கம் குறித்துப் பரப்பப்படும் பொய்களை நம்பக் கூடாது, உணவூட்டும் கரத்தைக் கடித்து விடக் கூடாது என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா வலியுறுத்தியுள்ளார்.
உலகப் பொருளாதாரச் சூழல் நிச்சயமற்றுள்ள வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசாங்கம் பல வசதிகளை அவர்களுக்குச் செய்து கொடுத்துள்ளது என்றாரவர்.
“அரசாங்கம் மக்களுக்கும் அரசுப் பணியாளர்களுக்கு எவ்வளவோ செய்துள்ளதால் அரசுப் பணியாளர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
“மக்களுக்குச் சேவை செய்வதன்வழி நாம் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உற்பத்தித் திறனைப் பெருக்கியும் மக்களுக்கு அரசாங்கம் செய்து கொடுக்க நினைப்பதைச் செய்து கொடுப்பதன் மூலமும் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
“நமக்கு உணவளிக்கும் கரத்தைக் கடித்து விடக்கூடாது. அரசாங்கத்தை வீழ்த்த பொறுப்பற்ற தரப்பினர் அள்ளிவிடும் பொய்களை நம்பி விடக்கூடாது”, என்றவர் இன்று மாலை கோலாலும்பூரில் ஒரு நிகழ்வில் கூறினார்.
அரசுப் பணியாளர்கள் லஞ்சம் ஊட்டும் கைகளைத் தான் கடிக்கிறார்கள்! மதங்கள் கூட அது தவறு என்று சொல்லுவதில்லை!
மக்களின் வரிப்பணத்தில் அரசாங்கத் தலைவர்களுக்கு மக்கள் உணவளிக்கிறார்கள். அப்படி உணவு ஊட்டிய மக்களின் கையைக் கடித்துத் துப்பி விட்டு தத்துவம் பேசினால் எப்படி?
இப்படி ஊட்டி ஊட்டியேதான் அரசாங்க பணியாளர்களைக் கெடுத்தீர்கள். இப்போதாவது அவர்களை சுயமாக சிந்திக்க விடுங்கள்.
யாருடைய பணத்தில் யார் உணவளிக்கிறார்கள் . சொல்வதெல்லாம் முட்டாள் தனமாக உள்ளதே ? இவன்கள் சம்பாதித்து சோறு போடுவதுபோல பேசுகிறான் . நாங்கள் உழைக்கவில்லையா?. மக்களின் பணத்தில் சவாடல் பேச்சு .
கையூட்டு வாங்கும் அரசாங்கத்தை வேறு என்ன செய்வது.
தேடலின் விடியல்
மலேசியா தமிழ் மொழி நாள்
அரசுப் பணியாளரான பிரதமர் வாங்கினால் நன்கொடை ஏனென்றால் அது பில்லியன்,
அரசுப் பணியாளர்கள் வாங்கினால் கையூட்டு – லஞ்சம் ஏனென்றால் அது மில்லியன்.
இனி அரசுப் பணியாளர்கள் மில்லியனை ஒதுக்கிவிட்டு பில்லியனுக்கு தாவ முயற்சி செய்யலாமே.
கையூட்டு – லஞ்சம் போன்றவற்றை ஒழிக்க அரசுப் பணியாளர்கள் பெரும் பங்கு வகிக்கலாம்.
எல்.ஆர்.டி 3- விரைவு ரயில் திட்டத்தில் 45-விழுக்காடு அவர்களுக்காம். மீதமுள்ளதில் எத்தனை விழுக்காடு நமக்கு? அதில் நமக்கு எத்தனை விழுக்காடு தருகிறார்களோ அத்தனை விழுக்காட்டினர் மட்டும் நம்மில் அவர்களுக்கு வாக்களித்தால் போதும் என்று நாமே முடிவெடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
டேய் கம்மனாட்டி -உன்னுடைய மூளையை எங்கே வைத்திருக்கிறாய்? கொள்கை ஏதும் இல்லாத நாதாரிகள் தானே நீயும் உன்னுடைய தலையும்? நீ ஒன்றும் வெறுமனே வேலை கொடுக்கவில்லை -வேண்டுமானால் உன்னுடைய அண்ணன் தம்பி பிள்ளைகளுக்கு வெறுமனே கொடுக்கலாம்–மற்றவர்கள் வேலை செய்பவர்கள்– எல்லா மக்களுக்கும் வேலை செய்ய உரிமை இருக்கிறது– ஆனால் இன மத பாகுபாட்டை முதல்மை ஆக்கியதே உங்களின் நாறிப்போன ஆட்சிதானே
அட கூறுகெட்ட குப்பா !! உமக்கும் நீர் தாங்கிப் பிடிக்கும் அரசாங்கத்திற்கும் உணவளிப்பதே சாமான்ய மக்களின் வரிப்பணம் தானே ? அப்படியென்றால் யார் உணவூட்டும் கரம் ? சாதாரண மக்களா ? அரசாங்கமா ? அற்பப்பதரே !! அறியாமல் உளறுவதற்கென்றே அரசியல் நடத்தும் இப்படிப்பட்ட அறிவுஜீவிகளை என்ன சொல்லி திட்டுவதென்றே புரியவில்லை ( நாமளும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமா திட்டாமல் நல்ல கருத்துக்கள் பதியலாம்னு பார்த்தா, கடுப்பேற்றுறான் மைலார்ட் !!! 🙁
“உணவூட்டும் கரத்தைக் கடித்து விடாதீர்கள்: அரசுப் பணியாளர்களுக்கு அறிவுறுத்து” என்பது தலையங்கம் … அரசாங்கத்துக்கு உணவூட்டும் உழைப்பாளிகளின் கைகளை கடிக்கும் பொது எங்கே சென்றது உங்கள் ஞானோதயம் ?