பாஸ், கடந்த பொதுத் தேர்தலில் பிகேஆருக்கு “இரவல் கொடுத்த” நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளைத் திரும்ப எடுத்துக்கொள்ளக்கூடும் எனக் குறிப்புக் காட்டியுள்ளது .
இரு கட்சிகளுக்குமிடையில் அண்மையில் உறவுகள் நலிவடைந்திருப்பதுதான் இதற்குக் காரணம் என்று கூறிய கிளந்தான் பாஸ் செயலாளர் சே அப்துல்லா மாட் நாவி, எல்லாவற்றுக்கும் சேர்த்து அடுத்த மாதம் நடைபெறும் பாஸ் ஆண்டுக்கூட்டத்தில், முக்தாமாரில் முடிவெடுக்கப்படும் என்றார்.
பக்கத்தான் ஹராபான் மேடைகளில் டிஏபியுடன் சேர்ந்து கொண்டு பிகேஆர் கிளந்தான் அரசைக் குறைகூறி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
கடந்த பொதுத் தேர்தலில் கிளந்தானில் 14 நாடாளுமன்ற தொகுதிகளில் மூன்றிலும், நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் பிகேஆர் போட்டியிட்டது. ஆனால், ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வென்றது